Asha Jaoar Majhe (2014)
Directed by Aditya Vikram Sengupta
Starring: Ritwick Chakraborty, Basabdatta Chatterjee
I have never been a fan of movies with no dialogue. I have seen people liking them for artistic reasons but mostly I feel impatient to sit through movies with no conversations. However, this movie changed it all for me. This is an award-winning masterpiece with 2 main characters playing husband and wife having no interaction with each other. The movie's story is set in the backdrop of Bengal where the economic downfall is being witnessed and an imminent revolution is on its way. This middle-class couple are in a position to work day and night to make ends meet. It shows how a beautiful screenplay and cinematography and tell a story so clearly even in the absence of dialogue. The film did face criticisms for having plagiarism relating it to an Iranian short film but surely a must-watch film.
பெரும்பாலும் நான் உரையாடல் இல்லாத திரைப்படங்களை விருப்பப்பட்டு பார்ப்பதில்லை. கமலின் "பேசும் படம்" பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இதுவரை பார்த்ததில்லை. நிச்சயம் இனி பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது, இந்த திரைப்படத்தை பார்த்த பிறகு. வங்காளத்தில் பொருளாதாரம் முடங்கிவிடுகிறது. இதனால் பல மக்கள் வேலையே இழக்கின்றனர். மக்கள் கோபத்தால் புரட்சி வெடிக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு இளம் தம்பதி தங்கள் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்காக அல்லும் பகலும் உழைக்கின்றனர். ஒருவருக்கு இரவில் வேலை , மற்றோருவருக்கு பகலில் பணி. இந்த நேர மாற்றத்தால் ஒருவரை ஒருவர் பார்த்து, பேசிக்கொள்ள கூட நேரமில்லை. உரையாடல் இல்லாமல் வெறும் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவின் மூலம் மட்டுமே ஒரு அழகான காவியத்தை தந்திருக்கிறார் இயக்குனர். இத்திரைப்படம் பல விருதுகளை வாங்கினாலும், இதே போன்ற கதையம்சத்தை கொண்ட ஒரு இரானிய குறும்படத்தின் நகல் போன்று உள்ளது என்ற குற்றுசாட்டுகளும் எழுந்தன. ஆயினும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.
Comments