East Side Sushi (2014)
Director: Anthony Lucero
Starring: Diana Elizabeth Torres, Yutaka Takeuchi
This movie has a beautiful, dramatic plot that brings together the mouth-watering cuisines of Mexico and Japan. Juana (J, silent) is a single Mexican mother living with her elderly father and her young daughter managing her own little roadside fruit stall. Though it's a tasteless job with less income, she has no choice. One day, she gets mugged and assaulted by a few strangers and all the money she had saved so far by selling fruits is gone. Devastated, she starts looking for jobs. There is a job opening in a Japanese restaurant for a Maid who is expected to clean the utensils and maintain the pantry. Though being an amazing cook herself, Juana would have expected a better position, she takes up this job without complaining. During her tenure, she learned a lot about Japanese cuisine, thanks to her colleagues. Among other things, she is fascinated by Sushi. She understands that Japanese food requires a lot of precision and technicality without which there wouldn't be anything worthy to serve. Now, her one true goal is to become a Sushi Master. Few people around her try to bring her down and make her understand that being a Mexican woman, this is a highly impossible and overambitious thought. Will she break those stereotypes and become a sushi master after all? The movie will tell.
மெக்ஸிகோ -ஜப்பான் . இரண்டு நாடுகளுக்குமான கலாச்சார வேறுபாடுகளை உணவின் மூலம் சுவையாக கூறுகிறது இந்த படம். Juana என்ற மெக்ஸிகன் பெண்.தன்னுடைய வயது முதிர்ந்த தந்தையுடனும் ஒரே மகளுடனும் வாழ்கிறாள்.தினமும் தங்களுக்கென்று இருக்கும் ஒரு சிறிய தெருவோர பழக்கடையின் மூலம் வரும் வருமானத்தில் அவர்கள் வாழ்க்கை ஓடுகிறது. அதற்கும் ஒரு நாள் ஆபத்து வந்துவிடுகிறது.சில மர்ம நபர்கள் , அவளை தாக்கி பணப்பெட்டியை உடைத்து , தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுகின்றனர். இனி பழக்கடை வியாபாரம் கைக்கொடுக்க போவதில்லை என்பதை உணர்ந்த அவள் , ஒரு ஜப்பானிய உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்கிறாள். Juana விற்கு நன்கு சமைக்க வரும் என்றாலும் தற்போதைக்கு கிடைத்த பணியை சோர்வின்றி செய்கிறாள் . நல்ல வருமானம், பயமில்லா வேலை, தன்னை சுற்றி நட்புடன் பழகும் சக வேலையாட்கள் என அமைதியாக நாட்கள் ஓடுகின்றன. அங்கே சமைக்கும் ஜப்பானிய சமையல் காரர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறாள் . ஜப்பானியர்களின் முக்கிய உணவான "சூஷி" யின் மேல் அவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. சூஷியின் செய்முறை அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்கிறாள். சமையல் ஒரு காலை, அதுவும் ஜப்பானிய உணவின் துல்லியமும் , நுட்பமும் அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்கிறாள். ஒரு நாள் தானும் அந்த உணவகத்தில் சூஷி மாஸ்டராக வேண்டும் என்ற ஆசை அவளுக்குள் துளிர் விடுகிறது.ஒரு மெக்ஸிகன் பெண்மணி எப்படி சூஷி மாஸ்டர் ஆக முடியும் என்ற பலரின் முனுமுனுகளுக்கிடையே பல விதமான தடைகளும் அவள் முன் வந்து குவிகின்றன . இவை எல்லாவற்றையும் தாண்டி Juana வால் தன் இலக்கை அடைய முடிகிறதா என்பதை படம் விறுவிறுப்புடன் கூறுகிறது.
Comments