Possum (2018)
Director: Matthew Holness
Starring: Sean Harris, Alun Armstrong
A defamed children's puppeteer who is emotionally unstable and psychologically scarred plans to dispose of his grotesque puppet. Every time she tries discarding it, the puppet comes back to haunt him emotionally by being there in his room the very next day. This disturbs him in turn and deprives him of his sleep. His step-father also lives next door with whom he has an estranged relationship. Meanwhile, a young boy in the same neighbourhood gets kidnapped and the policemen start suspecting the puppeteer for it, given his weird behaviour and constant trips with the bag. The climax of the movie gives answers to the following questions,
-Who kidnapped the young lad?
-Why does the possum keep chasing him?
குழந்தைகளுக்காக பொம்மலாட்டம் செய்து வாழ்ந்து வருகிறார் அந்த நபர். தற்போது அந்த தொழிலுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லாததால் , தனக்கென இந்த உலகத்தில் இருக்கும் ஒரே துணையான "Possum" எனப்படும் அந்த பொம்மைதான் எல்லாமே என்று சோகம் நிறைந்த முகத்துடனே நாட்களை கழிக்கிறார். பார்ப்பதற்கு திடுக்கிட வைக்கும் தோற்றத்தை கொண்ட அந்த பொம்மையை ஒரு பையில் அடைத்து தன் அறையிலேயே வைத்திருக்கிறார். அவர் அறைக்கு பக்கத்தில் வாழ்பவர் தன்னுடைய வளர்ப்புத்தந்தை. இவர்களுக்குள் இருக்கும் உறவும் கசப்பான ஒன்று. ஒரு நாள் தன்னுடைய பொம்மை இனி தேவையற்றது என்று முடிவு செய்து அதை எறிந்து விட முடிவெடுக்கிறார். ஆனால் எவ்வளவு தூரம் சென்று அதை அப்புறப்படுத்தினாலும் , மறுநாள் தன் அறையில் பயமூட்டும் வகையில் பொம்மை வந்து விடுகிறது.கொடுங்கனவுகளால் சரியான நித்திரை இன்றியும் தவிக்கிறார். அதே சமயம் அவர் வசிக்கும் பகுதியில் ஒரு இளைஞன் கடத்தப்படுகிறான். அதன் பொருட்டு காவல்துறையின் சந்தேகப்பார்வையும் இவரின் மீது விழுகிறது. இளைஞனை கடத்தியது யார் , பொம்மை இவரை விடாது துரத்துவது ஏன் என்ற கேள்விகளுக்கு முடிவு படத்தின் இறுதியில் கூறப்படுகிறது.
Comments