The Boy Who Harnessed the Wind (2019)
Director: Chiwetel Ejiofor
Starring: Maxwell Simba, Chiwetel Ejiofor, Lily Banda
ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி என்னும் ஒரு சிறிய நாட்டில் பிறந்து , உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாதனையை நிகழ்த்திக்காட்டிய வில்லியம் என்ற இளைஞனின் உண்மைக் கதை. 2000ஆம் ஆண்டு கடும் வறட்சிக்கு உள்ளானது மலாவி. இதனால் உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி மக்கள் தவித்தனர். விவசாயமும் கடும் பாதிப்புக்கு உள்ளானது. அரசாங்கமும் மக்களை கைவிட்டது. வறுமையின் கோர பிடியில் சிக்கியது வில்லியமின் குடும்பம்.இதனால் வில்லியம் தான் மிகவும் விரும்பிய பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு தந்தையுடன் வயலில் இறங்கி வேலை செய்யும் சூழல் உருவாகிறது. பள்ளியில் பயிலும்போதே அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த வில்லியம்ஸ் , அங்கிருந்த நூலகத்தில் உள்ள அறிவியல் புத்தகங்களையும், தேவை இல்லை என தூக்கி எறியப்பட்ட மின்னணு உருப்படிகளையும் ஆராய்ச்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான். இந்நிலையில் ஒரு நாள் காற்றாலை மூலம் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை உருவாக்கும் யோசனை வில்லியம்ஸுக்கு வரவே , தனக்கு கிடைத்த சிறு சிறு பொருட்களை கொண்டு ஒரு காற்றாலையை வடிவமைக்கின்றான். பிற்காலத்தில் உலகளவில் போற்றப்படும் இளம் கண்டுபிடிப்பாளராக வில்லியம் உயர இது காரணமாய் அமைகிறது. இந்த சாதனையை படைக்க வில்லியம்ஸ் கடந்து வந்த கரடு முரடான பாதையை அழகாக படம்பிடித்திருக்கிறது இந்தத் திரைப்படம்.
This film is based on an inspiring story of a young boy named William from Malawi, Africa. In the mid-2000s, the village where he lived faced a severe drought due to which agriculture was badly affected. His parents, who were farmers are severely affected by this drought and struggle to feed the family. This also affects William's schooling, as they are unable to pay his tuition fees. William, an inquisitive learner always played with electronic items like radios, discarded electronic chipsets, motors etc from the junkyard along with his friend. He also loved going to the School Library and exploring scientific experiments through the old textbooks. Owing to the growing poverty and hunger, the whole village goes through a difficult phase with people rioting against the careless government and abandoning the village. William somehow feels positive about building a machine that can harness wind energy and build an electric water pump in order to get water for the crops. After crossing so many obstacles and objections from various ends, William successfully builds the wind turbine prototype and extracts water for the crops. The rest is history. This is an inspiring must-watch movie that needs to be shown to young learners to foster Design Thinking in them.
Comments