Bright Star (2011)
Director: Jane Campion
Starring: Ben Whishaw, Abbie Cornish.
This movie is a biopic of John Keats, the world-famous poet who gave us the most wonderful lines, "The thing of beauty is a joy forever". Keats did have an easy life. He struggled to make both ends meet. Poems, for him apart from an art of expression, were also tools to earn his bread. He wrote the most beautiful poems which were appreciated as well as criticised during his time. Keats fell in love with a woman called Fanny Browne, a French woman who in turn loved the poet and his poems deeply. Keats wanted to provide her with a good life and hence focused on earning more and finding new opportunities. Unfortunately, he did not last long but his poems did. Keats died at a very young age in Rome miles away from the woman he loved, leaving her devastated, with just his poems, sonnets and words to comfort her. A beautiful poetic movie.
உலகின் புகழபெற்ற கவிஞர்களுள் ஒருவரான ஜான் கீட்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு தான் இந்த திரைப்படம். ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடு தான் கவிதைகள் என்பதை அழகாக சொல்லும் படம். கீட்ஸ் தனது நண்பருடன் ஒரே வீட்டில் வாழ்ந்தபோது வருமானம் ஈட்டுவதற்காக அவர் எழுதிய கவிதைகள் , பிறகு அவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டது, அப்போது வாழ்ந்த மக்களுக்கு அவரது கவிதைகள் பல காரணங்களுக்காக பிடித்ததும் பிடிக்காமல் போனதும் அவரை எந்த அளவு பாதித்தது போன்ற சுவாரஸ்ய தகவல்கள் நிறைந்த படம் இது. கீட்ஸ் தன் உயிருக்கு நிகராக நேசித்த ஒரு பெண்மணி Fanny Browne. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதலே கீட்ஸை பல புகழ்மிக்க கவிதைகள் எழுத தூண்டுகோலாக அமைந்தது. சோகம் என்னவென்றால் இந்த கவிதைகள் எல்லாம் கீட்ஸ் இறந்தே பிறகே வெகுவாக கொண்டாடப்பட்டன, அவரது புத்தகங்களும் உலக பிரசித்திபெற்றவையாயின. கீட்சும் அவரது காதலியும் ஒன்று சேர்ந்தார்களா ? கீட்ஸ் தனது வாழ்க்கை இலட்சியத்தை அடைந்தாரா என்பதை படத்தின் முடிவு விளக்குகின்றது. மென்மையான, சோகம் சூழ்ந்த காதல் கதை இது.
Comments