The Earthquake Bird (2019)
Director: Wash Westmoreland
Starring: Alicia Vikander, Riley Keough, Naoki Kobayashi
This is one of those movies that'll make you think a bit and then gain clarity on the climax. The movie is based on a best-selling debut novel by Susanna Jones by the same. The story revolves around 2 characters. Lucy is an expat who lives in Japan working as a translator. Lucy is very fluent in Japanese and knows the place and people well. She falls for a young photographer Teiji who has a habit of constantly clicking pictures of everything around him. Lily is a new resident who depends on Lucy to understand the place and culture as she is getting settled slowly into the place. Lucy also had a traumatic childhood where she was harassed by her brothers and the men around her. She also has a weird belief of being the centre of negative energy that brings death to the people around her. In this situation, a love triangle starts developing among the three and Lucy becomes annoyed by the closeness of Lily and Teiji. One day, Lily gets murdered brutally and mysteriously. Lucy is arrested and is investigated for her involvement in the tragedy? Did Lucy really kill Lily? Why is the movie called "The Earthquake Bird"? Watch the movie to find the answer through an unpredictable ending.
Susanna Jones எழுதிய "Earthquake Bird" என்ற பிரபல ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இது. கதை ஒன்றும் புதிதான ஒன்று இல்லையென்றாலும், அது காட்சிப்படுத்தப்பட்ட விதம் வித்தியாசமாக இருக்கின்றது. Lucy, Lilly, Teiji என்ற மூன்று கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் சம்பவங்களை உள்ளடக்கிய கதை இது. Lucy ஜப்பானில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். ஆங்கிலம் மற்றும் ஜப்பான் மொழியில் சரளமாக பேசும் Lucy க்கு ஒரு கூடுதல் பொறுப்பும் வாந்து சேர்கிறது. Lucy தன் அலுவலக நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி Lilly என்ற பெண்ணிற்கு உதவி செய்ய ஒப்புக்கொள்கிறாள். Lillyக்கு ஜப்பான் புது இடம் என்பதால் மொழி, இடம் கண்டுபிடித்தல் போன்ற விஷயங்களில் Lucy உதவியாக இருக்கிறாள். சில நாட்களில் இதுவே Lucyக்கு புது தலைவலியை உண்டாக்குகிறது. Lucy ஜப்பானில் வசிக்கும் Taiji என்ற புகைப்படக்காரரின் மேல் காதல் வயப்படுகிறாள். Taijiயின் மீதுள்ள தீரா காதல் அவன் மீது அதீத நம்பிக்கையையும் உருவாக்குகிறது. சிறு வயதில் தன் சகோதரர்களாலும், தன்னை சுற்றி உள்ள பல ஆண்களினாலும் தனக்கு உண்டான பிரச்சனைகளை Taijiயிடம் பகிர்கிறாள் Lucy . இது அவர்களுக்குள் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கிறது. காலம் நகர நகர , Lilly இந்த உறவுக்குள் விரிசலை ஏற்படுத்துகிறாள். Taijiயும் Lillyயும் நெருக்கமாவதை Lucyயால் சகித்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகுகிறது. ஒரு நாள் Lilly மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். Lucy குற்றவாளியாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுகிறாள். உண்மையாக அந்த கொலையை செய்தது Lucyயா? திரைப்படத்திற்கு ஏன் "The Earthquake Bird" என்ற பெயர் ? படத்தின் இறுதியில் உள்ள வித்தியாசமான முடிவு இதற்கு பதில்.
Comments