J.Edgar (2011)
Director: Clint Eastwood
Starring: Leonardo DiCaprio, Armie Hammer, Naomi Watts, Judi Dench
Edgar Hoover, the first director of the FBI was a relentless, ruthless and powerful man who has made tremendous achievements in building the FBI as one of the best crime-fighting agencies in the world. He was the mastermind behind the introduction of centralizing fingerprints into a database and advanced forensic analysis. The film doesn't stop there. It uncovers the secrets and facts of his life that remained in the dark for so long. His hypocrisy, sexual orientation, and control over the 8 US presidents by getting his hands on all sensitive and confidential data also kept him in power for more than 40 years as the head of the FBI. Amazing portrayal of Edgar by Leo.
எட்கர் ஹூவர் , அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்தின் முதல் இயக்குனர் ஆவார் . இந்த துறையில் இளம் வயதிலிருந்தே பணியாற்றி பல முன்னோடி திட்டங்களை செயற்பாட்டிற்கு கொண்டு வந்தார். கைரேகை பரிசோதனைக்கு எதுவாக ஒரு தரவுத்தளத்தை முதன்முதலில் உருவாக்கியவர் இவரே. உளவுத்துறையில் முதன்முதலில் அறிவியல் மட்டும் தொழில்நுட்பத்தை உட்புகுத்தியவரும் இவரே . எனினும் இந்த திரைப்படம் , எட்கரின் உலகிற்கு பெரிதும் தெரியாத மறுமுகத்தையும் படம்பிடித்து காட்டுகிறது. சில நேரங்களில் அவர் சந்தர்ப்பவாதியாகவும், கபட வேடதாரியாகவும் மாறிய தருணங்கள் , மிகுந்த முக்கித்துவம் வாய்ந்த தகவல்களை தன கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு 8 அமெரிக்க அதிபர்களை ஆட்டிப்படைத்த விதம் , தன்னுடைய பாலினம் தொடர்பான பல சர்ச்சைகள் போன்றவை உண்டு . லியோவின் நடிப்பு அபாரம் .
Comments