THE KIDS ARE ALRIGHT(2010)
Directed by Lisa Cholodenko
Starring: Julianne Moore, Annette Benning, Mark Ruffalo.
A same-sex couple and mothers create a perfect family with 2 kids fathered by the same donor. After the kids grow up, one fine day they decide to discover who their father was. They also get to meet him and start liking him for who he is. Once the mothers discover this, they are reluctant to accept this new relationship in the beginning but eventually end up considering him as a part of the family as well. Things soon start to become complicated among them as the proximity of this guy increases with the family and the children. All hell breaks loose when a few truths come out and the family has now lost its peacefulness. The film concludes with an unsophisticated climax and a strong message that will leave you pondering the reality of life and relationships. One needs to watch this movie with an open mind.
ஓரினசேர்க்கையாளர்களாக இணைந்து வாழும் இரு பெண்கள், ஒரு உயிரணு வங்கியின் உதவியுடன் கருவுற்று ஆளுக்கொரு குழந்தைக்கு தாயாகின்றனர்.
குழந்தைகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் தங்களுக்கென்ற ஒரு குடும்பத்தை உருவாக்கி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.பிள்ளைகள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு தங்களுடைய தந்தை யார் என்பதை அறிய ஆசைப்பட்டு , உயிரணு வங்கியிலிருந்து பெறப்பட்ட, வீட்டிலிருந்த சில பழைய கோப்புகளை ஆராய்ந்து, ஒரு வழியாக அவரது தகவல்களை பெற்று அவரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றுவிடுகின்றனர். பிரச்சனையின் தொடக்கமும் இதுதான். இது வரை யார் என்றே தெரியாத அந்த மனிதரை தந்தையாக ஏற்றுக்கொள்ள வித்தியாசமாக தோன்றினாலும், இவர்களுக்குள் இயற்கையாகவே ஒரு பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. சில நாட்களுக்கு பின்னர் , இந்த குடும்பத்திற்குள் முழுதாக நுழையும் அந்த நபர், தன்னுடன் சில பிரச்சனைகளையும் சேர்த்தே கொண்டு வருகிறார். அமைதியான அந்த குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகின்றன. இறுதியில் என்ன நடக்கிறது , குடும்பத்திற்குள் பழைய அமைதி திரும்புகிறதா என்பதை வித்தியாசமான முறையில் எடுத்துச்சொல்கிறது இந்த திரைப்படம்.
Comments