Loving Vincent (2017)
Directors: Dorota Kobiela, Hugh Welchman
Starring:
Artists, Art lovers and enthusiasts will get goosebumps at the end of this movie. I literally felt the chills.
The frames of the scenes are animated versions of paintings done by a team of artists. The movie paints a beautiful picture of the story behind Van Gogh's suicide and the events that followed his death. Van Gogh had a habit of writing a lot of letters to his beloved brother all his life, who happened to be the only one who supported his work. It talks about the emotional struggles this genius artist went through during his life, his struggles to fit into society and his desire to stay remembered. The screenplay and picturization transports you to a world created through his painting style. A must-watch masterpiece.
வின்சென்ட் வான் கோ என்றாலே நமக்கு அவரின் புகழ்பெற்ற ஓவியமான Starry Night ஞாபகத்திற்கு வரும். இன்றளவும் உலகமே வியந்து புகழ்ந்து கொண்டிருக்கும் ஓவியரான வின்சென்ட்டின் வாழ்க்கை பல சோகங்களை நிறைந்ததாக இருந்துள்ளது. வின்சென்ட், சிறு வயதிலிருந்தே வித்தியாசமான சிந்தனைகளை கொண்டவராய் திகழ்கிறார். தனது பெற்றோரின் விருப்பப்படி தன் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாத நிலையில் , ஓவியங்கள் தீட்டுவதில் வின்சென்ட்டின் ஆர்வம் அதிகமாகிறது. இயற்கையை அதிகம் விரும்பும் வின்சென்ட் , வெயில், மழை, இரவு , பகல் பாராமல் எப்போதும் ஓவியம் தீட்டுவதில் காலத்தை போக்குகிறார். இதனால் அதிக வருமானம் இல்லாததால், தன்னுடைய சகோதரன் கொடுக்கும் பணத்தை வைத்து ஓவியங்கள் வரைய வண்ண சாயங்களை வாங்குகிறார். எட்டு வருடங்களில் அவர் வரைந்த ஓவியங்கள் 800க்கும் மேற்பட்டவை. சோகம் என்னவென்றால் வின்சென்ட் வாழ்ந்த காலத்தில் அவற்றில் ஒரே ஒரு ஓவியம் மட்டுமே விலைபோனது. மனஉளைச்சல் காரணமாக தன்னுடைய ஒரு காதை அறுத்துக்கொண்டது, 39 வயதில் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டது போன்ற மனதை கசக்கும் சம்பவங்களை உள்ளடக்கியது வின்சென்ட் வான் கோவின் வாழ்க்கை. அப்படிப்பட்ட ஒரு கலைஞரின் கதையை அவரது ஓவியங்களின் சாயலிலேயே படம்பிடித்திருக்கும் இந்த திரைக்காவியதை நிச்சயம் ஒரு முறையேனும் பாருங்கள்.
Comments