Moonrise Kingdom (2012)
Director: Wes Anderson
Starring: Bruce Willis, Edward Norton, Bill Murray, Frances McDormand, Tilda Swinton, Jason Schwartzman, Bob Balaban
If the first frame of this movie reminds you of The Grand Budapest Hotel, then you guessed it right! This is another masterpiece of director Wes Anderson. Vibrant colours, Exciting symphonies,tableau-like screenplay and a funny narration are all signature style elements in his movies. This movie has a simple plot. In an imaginary country represented by an imaginary map in the movie from time to time to trace the routes, a young boy from a scout summer camp falls in love with a young girl. They both have one thing in common. The people around them including their parents and guardians think that they are trouble-makers, anti-social and abnormal. Depressed by this situation, they immediately connect with each other and elope. Once the news spreads everybody else in the movie including the Scoutmaster, a policeman, fellow scouts and the girl's parents organize a search party looking for the missing couple. A beautiful climax unfolds to tell you whether the young lovers are separated or united.
படத்தின் முதல் காட்சியே உங்களுக்கு "The Grand Budapest Hotel" திரைப்படத்தை நினைவுபடுத்தினால், உங்களுக்கு பாராட்டுகள். இரண்டு திரைப்படத்தையும் இயக்கியவர் ஒரே இயக்குனர்; Wes Anderson. எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் தனித்தன்மை போல இவரின் படங்களிலும் தனக்கென ஒரு பாணியை கையாண்டிருப்பார். எழில் மிகு காட்சிகள் மற்றும் சிவப்பு , பச்சை , நீலம், மஞ்சள் போன்ற வண்ணங்களை அதிகமாக முன்னிலைப்படுத்தி ஒரு அழகிய கற்பனை கலந்த பின்னணி சூழலை உருவாக்குவது இவரது வாடிக்கை. அது மட்டுமல்ல படத்தின் பலத்திற்கு இசை மற்றோரு முக்கிய காரணி. விறுவிறுப்புடனும், தத்ரூபத்துடனும், நாடக பாணியில் திரைப்படங்களை கொடுப்பதில் Wes Anderson வல்லவர். இந்த திரைப்படத்தின் கதை மிக சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் , திரைக்கதையும் , பின்னணி இசையும் அதனை அருமையாக எடுத்து செல்கின்றன. ஒரு கற்பனை நாடு , அதற்கென்று ஒரு கற்பனை வரைபடம் , கற்பனை பெயர் என ஒரு தனி உலகத்தில் கதை தொடங்குகிறது. சாரணர் முகாமில் , தற்காப்பு மற்றும் உயிர்காப்பு யுத்திகளில் பயிற்சி பெரும் ஒரு அனாதை சிறுவனுக்கும் , பெற்றோரால் பாரம் என்று கருதப்படும் ஒரு சிறுமிக்கும் இடையே மலரும் கள்ளம் கபடமற்ற காதல் கதையை செல்லுகிறது இந்த திரைப்படம். சுற்றி உள்ளவர்களால் நிம்மதி இல்லாத நிலையில் இருவரும் ஒரு நாள் திட்டமிட்டு ஒன்றாக யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விடுகின்றனர். அவ்வளவுதான் , சிறுமியின் பெற்றோர் , சாரணர் முகாமின் தலைவர், மற்ற சிறுவர்கள், ஊர் காவலர், சிறார் சேவை மைய்யங்கள் என மொத்த ஊரும் அவர்களை தேடும் வேட்டையை தொடங்குகின்றனர். இறுதியில் காதலர்கள் பிரிந்தார்களா, சேர்ந்தார்களா என்பதை நகைச்சுவையுடன் கூடிய விறுவிறுப்போடு சொல்லுகிறது படத்தின் முடிவு.
Comments