Radio Silence (2019)
Director: Philippe Gagnon
Starring: Stars: Georgina Haig, John Ralston, Carrie-Lynn Neales
Dr Jill is a relationship therapist who runs a show on a local radio channel in Minneapolis. She speaks to her callers listening to their relationship issues and gives advice accordingly. However, her show has been successful and different because of the tone she uses while talking to her callers. Though Jill sympathizes with them, she gives brutal feedback with no filters whatsoever. Some callers do take it lightly and have made positive changes in their lives whereas others found it hurtful and rude. One night, when Jill gives such a suggestion to one of her callers named Alexis, she unknowingly drives Alexis to commit suicide. Alexis pulls the trigger while on call ending her life. Jill is shocked to the core. As the radio station discontinued the broadcast abruptly and due to the delay in transmission, the sound of the gunshot did not come out. Jill, thus escapes investigation or accusation in the suicide case. After the incident, Jill retires from the show as she is filled with guilt and trauma due to the tragic incident. However, in order to get the show back on air, the Radio station convinces Jill to resume the show promising her to offer the creative freedom to run the show however she wants, only this time having a friendly tone on air. One day Jill gets a caller named Alexis who asks her on air, "How do you sleep at night?". Jill is petrified hearing this, as the voice sounded similar to that of the girl who shot herself a few months ago. Is Alexis really dead or alive? Watch this interesting movie with multiple twists to find out!
டாக்டர் ஜில் மனித உறவுகளைப்பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்த ஒரு உளவியல் நிபுணர். மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வானொலியில் நிகழ்ச்சி நடத்தி வருபவர். தினமும் இரவு நேரத்தில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியில் பலர் டாக்டர் ஜில்லை தொடர்பு கொண்டு தங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்னைகளை விவாதித்து அதற்கான தீர்வுகளை கேட்டுப்பெறுகின்றனர். இது போன்ற மற்ற நிகழ்ச்சிகளை ஒப்பிடுகையில் டாக்டர் ஜில்லின் நிகழ்ச்சி சற்று வித்தியாசமானது. ஏன் என்றால் , இந்த நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருக்கும் மக்களிடம் டாக்டர் ஜில் மிகவும் மூர்க்கமாக பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பதால் . பொதுவாக மிக மென்மையாக பேசும் உளவியல் நிபுணர்களின் மத்தியில் ஜில் வித்தியாசமாக தெரிகிறார். சிலருக்கு இது பிடிக்கிறது ,உள்ளதை உள்ளபடி சொல்லுவதால். சிலருக்கு இப்படி முரட்டுத்தனமாக பேசுவது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலில் அலெக்சிஸ் என்ற இளம்பெண் டாக்டர் ஜில்லை தொடர்பு கொண்டு ஒரு பிரச்சனைக்கு தீர்வு கேட்க, ஜில் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அலெக்ஸிசிற்கு அறிவுரை வழங்குகிறார். இதனால் மனமுடைந்த அலெக்சிஸ் நேரலையிலே துப்பாக்கியால் தன்னுடைய உயிரை மடித்துக்கொள்கிறார்.அதிர்ந்து போன டாக்டர் ஜில், அந்த நிகழ்ச்சியை அதோடு நிறுத்திவிடுகிறார். அவர் வேலை செய்யும் வானொலி மய்யம் , பண்பலையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக துப்பாக்கி சத்தம் மக்களிடையே சென்றடையாததால் இந்த விஷயம் பெரிதாக்கப்படவில்லை .குற்ற உணர்ச்சியால் ஜில் மறுபடியும் எந்த நிகழ்ச்சியையும் நடத்தாமல் ஓய்வில் இருக்கிறார். சில மாதங்களுக்கு பிறகு அதே வானொலி மய்யம் டாக்டர் ஜில்லிடம் ஒரு வழியாக பேசி அவரை நிகழ்ச்சியை தொடர வைக்கிறார்கள் .ஆனால் இம்முறை டாக்டர் ஜில் தன் பழைய முறையை கையாளாமல் , மக்களிடம் மென்மையாக பேசுகிறார். அப்போது திடீரென அலெக்சிஸ் என்ற ஒரு பெண் அவரை தொடர்பு கொண்டு "நீ எப்படி இரவில் நிம்மதியாக உறங்குகிறாய்?" என்று கேட்கிறார். அந்த குரலை கேட்டு பதறிப்போன ஜில் இணைப்பை உடனே துண்டித்து விடுகிறார். அலெக்சிஸ் உண்மையிலேயே இறந்தாரா இல்லையா ? டாக்டர் ஜில்லை தொடர்பு கொண்டது யார் ? போன்ற கேள்விகளுக்கு திரைப்படத்தின் முடிவு விடை சொல்லுகிறது.
Comments