Trumbo (2015)
Director: Jay Roach
Starring: Bryan Cranston, Helen Mirren, Diane Lane, John Goodman, Louis C.K.
In the 1940s many famous screenwriters in Hollywood openly spoke and wrote in favour of Communism in America. This infuriated the general public and the government of the USA. These writers were labelled as traitors who were reportedly controlled by the Soviet Union. The Government launched a nationwide investigation to identify and blacklist such people. Dalton Trumbo, a renowned scriptwriter in Hollywood was one among them. He was imprisoned for 11 months and was banned from Hollywood which led to the termination of offers. Besides the legal battle with the Government, Dalton decided to find any opportunity possible to earn money and support his family. Hence, he started writing screenplays for little money and publishing them under someone else's name. This way, he wrote some successful screenplays for Roman Holiday, Spartacus, Exodus, The Brave One etc. Trumbo was awarded Oscars twice but was unable to accept it as the for the world, it was written by another writer. The movie wonderfully captures Dalton's journey and his final days in Hollywood. Bryan Cranston delivers a power-packed performance.
1940களில் ஹாலிவுட்டில் இருந்த பல திரைப்பட எழுத்தாளர்கள் கம்யூனிசத்தை ஆதரித்து வெளிப்படையாக எழுதத்தொடங்கினர். இதனால் கொதிப்படைந்த அமெரிக்க அரசு விசாரணை குழு அமைத்து ,கம்யூனிசதிற்கு ஆதரவு குரல் கொடுத்த அனைவரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. அவர்களில் உலக புகழ்பெற்ற திரைக்கதை எழுத்தாளர் டால்டன் ட்ராம்போவும் ஒருவர். சோவியத்தின் உதவியுடன் செயல்பட்டு ,அமெரிக்காவின் ஒற்றுமையை குலைக்கும் துரோகிகள் என்று மக்களாலும் , அரசாங்கத்தாலும் வெறுத்து ஒதுக்கப்பட்டனர் ட்ராம்போவும் அவரின் நண்பர்களும். இதனால் ட்ராம்போவிற்கு ஹாலிவுட்டில் வாய்ப்புகள் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. 11 மாதங்கள் சிறைவாசமும் கண்டார் . சட்டப்போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்தாலும் ,தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ள பணம் தேவைப்பட்டதால் ,ரகசியமாக சில திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கதை எழுதி கொடுத்து ,அதற்கு வேறு எழுத்தாளரின் பெயரை போட்டு படங்களை வெளியிடச்செய்தார். இதனால் "Roman Holiday" திரைப்படத்திற்கு தனக்கு கிடைக்க வேண்டிய ஆஸ்கர் விருதை வாங்க முடியாமல் விட்டுக்கொடுத்தார். தன் பெயர் மட்டும் தான் தடைசெய்யப்பட்டிருக்கிறது ,திறமை அல்ல என்று உணர்ந்து , The Brave one, Spartacus போன்ற வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை எழுதினார். இரண்டாவது ஆஸ்கரும் கிடைத்தது , ஆனால் வெளிப்படையாக அதனை வாங்கமுடியவில்லை. இது போன்ற ட்ராம்போவின் பல சுவாரசியமான வாழ்க்கை நிகழ்வுகளையும் அவரின் வாழ்வில் இறுதியில் அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தையும் தொகுத்து வழங்குகிறது இந்தத்திரைப்படம்.
Comments