A VERY LONG ENGAGEMENT(2004)
Director :Jean-Pierre Jeunet
Starring: Audrey Tautou,Gaspard Ulliel, Marion Cotillard
During World War I, many French soldiers lost their lives on the battlefield and many of the troops also planned to escape military service through self-mutilation. In the meantime, a young woman who is longing to see the face of her lover and wants to know his whereabouts starts a pursuit. She also hires a private investigator for support and gathers clues that will lead her towards finding out what happened to her beau. Despite the difficulties and hurdles she encounters during this quest, she never loses hope and faith. The movie with an aesthetically pleasing screenplay and cinematography unfolds the climax. It reminded me of "Amelie".
ஒன்றாம் உலகப்போர் நடந்துகொண்டிருக்கும் நேரம் அது. தோட்டாக்களுக்கும், பயங்கர குண்டுகளுக்கும் பல பிரஞ்சு ராணுவப்படை வீரர்கள் இறையாகிக்கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் பிழைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதை அறிந்தும் , தன் காதலனின் கதி என்ன என்பதை அறிந்து கொள்ள தன்னால் முயன்ற எல்லா முயற்சிகளையும் எடுப்பதற்கு ஒரு இளம்பெண் ஆயத்தமாகிறாள். தனக்கு உதவியாக ஒரு துப்பறிவாளரை தேர்ந்தெடுத்து ,அவருடன் பல இடங்களுக்கு பயணித்து தன்னுடைய காதலன் என்ன ஆனான் என்னும் கேள்விக்கு விடை தேடுகிறாள். ஒரு அடி முன் வைத்தால் இரண்டடி பின்னே தள்ளும் பல பிரச்சனைகளை சந்திக்கிறாள் . இருப்பினும் தன் இலக்கிலிருந்து மாறாமல் , தன்நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தேடுதல் தொடர்கிறது. இறுதியில் காதலனை காணப்பெறும் வாய்ப்பு கிடைத்ததா ? இருவரும் ஒன்றிணைவார்களா என்பதை இந்த படம் கலைநயத்துடன் கூறியிருக்கிறது. "அமீலி" திரைப்படத்தை நினைவூட்டும் படம்.
Comments