Adrift (2018)
Director: Baltasar Kormákur
Starring: Shailene Woodley, Sam Claflin
A young couple, Tami and Richard who share common interests like sailing travelling and exploring the world fall in love and get engaged. Unfortunately during one of their seafaring adventure, their yacht meets a storm in the middle of the sea and gets irreparable damage. Tami manages to survive with little wounds only to find Richard's leg broken and rib cage severely damaged. The yacht keeps drifting while Tami with the help of bedridden Richard figures out how to reach the land before they run out of food and drinking water. However, the end of the movie shows what she sees is mostly not reality.
உண்மை சம்பவங்களை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. கடற்பயணத்தில் அதிகம் ஆர்வமுள்ள ரிச்சர்ட்- டேமி என்ற காதல் ஜோடி ஒரு படகில் தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள். எதிர்பாராத விதமாக கடலுக்கு நடுவே சென்றுகொண்டிருக்கும்போது புயல் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்ள டேமியும் ரிச்சர்டும் ஆயத்தமாகிறார்கள். ஆனால் அலையின் வேகத்தை சமாளிக்க முடியாமல் படகு கவிழும் நிலைக்கு சென்றுவிடுகிறது. டேமி சிறு காயங்களுடன் உயிர் பிழைக்கிறார். ரிச்சர்ட் தன் காலிலும் விலாவிலும் பலத்த எலும்புமுறிவுகளுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை டேமி காண்கிறார். அவருக்கு தேவையான முதலுதவிகள் செய்துகொண்டே , உடைந்து போன படகை சரி செய்து, பக்கத்தில் இருக்கும் நிலப்பரப்பை நோக்கி ஓட்டிச்செல்கிறார் டேமி . படத்தின் முடிவில் ஒளிந்திருக்கும் ஒரு சுவாரசியமான தகவல் உயிர்வாழ்வதற்கான உள்ளுணர்வு மனிதனை எந்த அளவுக்கு சிந்திக்க வைக்கும் என்பதை நமக்கு சொல்கிறது.
Comments