Director : Jan Komasa
Starring: Maciej Musiałowski, Vanessa Aleksander, Agata Kulesza, Danuta Stenka
This is one movie that resembles the current political unrest created by the influence of social media globally. The movie is about a young fellow who gets thrown out of his law college for plagiarising his assignment. His uncle and aunt who fund his education constantly look down upon him and treat him as their inferior. This internally creates a lot of disturbance in him and he plans to avenge them soon. He joins a company that runs negative and positive campaigns for certain individuals as per the request of their clients through Social Media. As he learns the technicalities of such campaigns, he also uses social media as a platform for spreading fake news and hate-mongering. This results in devastating consequences. Coincidentally and unfortunately, three weeks after the movie got wrapped up, the mayor of Gdansk, a city in Poland was stabbed by a mob during an event and was killed. He was also a target for a large number of online trolls.
ஒரு நாட்டின் அரசியல் சூழலை, தகவல் தொழில்நுப்டமும் , சமூக வலைத்தளங்களும் எந்த அளவு தீர்மானிக்கின்றன என்பதை பிரதிபலிக்கும் திரைப்படம் இது. ஒரு பணக்கார குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு , அவமானதிற்கு உள்ளாகிற இளைஞன் ஒருவன் , போலந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சமூக வலைதள நிபுணராக பணிக்கு சேர்கிறான். தேர்தலில் வெற்றி பெற விரும்பும் ஒரு அரசியல்வாதிக்காக சமூக வலைதள பிரிச்சாரங்களை உருவாக்குவது இந்த இளைஞனின் வேலை. நாட்கள் செல்ல செல்ல தன் கையில் உள்ள அந்த தொழில்நுட்ப ஆயுதத்தை சில ஆபத்தான விஷயங்களுக்கு அந்த இளைஞன் பயன்படுத்த தொடங்குகிறான். அதன் விளைவு என்ன என்பதை படத்தின் முடிவு சொல்கிறது. இதில் உள்ள ஒரு வினோதமான நிகழ்வு என்னவென்றால் , இதன் படப்பிடிப்பு நிறைவுபெற்ற மூன்று வாரங்களுக்கு பிறகு போலந்தின் டான்ஸ்க் என்ற நகரின் மேயர் சில மர்ம நபர்களால் குத்தி கொல்லப்பட்டார். இதற்கு முன் பல நாட்களாக அவரை சமூக வலைதளங்களில் மக்கள் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments