Loving (2016)
Starring: Joel Edgerton, Ruth Negga, Terri Abney, Michael Shannon.
Loving is a biographical romantic drama film based on the lives of Richard Loving and Mildred Loving, an interracial couple who faced litigation for being wedded. The Racial Integrity Act in Virginia prohibited interracial marriages and is considered illegal. Richard and Mildred are madly in love with each other and get married in Washington D.C. in 1958. However, upon returning to Virginia, the local Sheriff arrests them as the marriage laws are invalid in Virginia despite having a marriage license. Though the couple built a family in Washington staying in one of their friend's houses, Mildred desperately wanted to return to Virginia and watch her kids grow up in the country. Hence they plan to appeal to the Federal Supreme Court and successfully get a favourable verdict. This movie wonderfully captures how love transcends race. The moment when Richard says, "Tell the judge I love my wife" when asked if he has any message for the Supreme Court justices is a beautiful record of true love.
1958ல் ரிச்சர்ட் லவ்விங் , மில்ட்ரெட் லவ்விங் என்ற அமெரிக்க தம்பதியினரின் திருமணம் அமெரிக்க சட்ட வரலாற்றில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள். கலப்பின திருமணங்கள் பெருங்குற்றமாக கருதப்பட்ட விர்ஜினியாவில் வசிக்கும் ரிச்சர்டும் மில்ரெடிட்டும் காதல் வயப்படுகின்றனர். வாஷிங்டன் சென்று அவர்கள் திருமணம் செய்துகொண்டு அதற்கான சான்றிதழை பெற்றாலும் , விர்ஜினியாவிற்குள் அந்த சான்றிதழ் செல்லாததாக மாறிவிடுகிறது. இதனால் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற திருமணம் என்று கூறி இருவரையும் நள்ளிரவில் கைது செய்கின்றனர் போலீசார். நிறைமாத கர்பிணி என்றும் பாராமல் மில்ட்ரெட்டை ஒரு இரவு முழுவதும் சிறையிலடைக்கின்றனர். அதிக நிறவெறி இனவெறி நிறைந்த மக்களை கொண்ட அந்த ஊரை விட்டு வாஷிங்டன் சென்று தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர் ரிச்சர்டும் மில்ட்ரெட்டும். அதன் பிறகு 3 குழந்தைகள் பிறக்கின்றன. வாஷிங்டனில் காவல்துறை அடக்குமுறை இல்லாத சூழலில் அமைதியாக வாழ்ந்தாலும் தங்கள் பெற்றோரை நினைத்த நேரத்தில் சென்று பார்க்க முடியவில்லை, குழந்தைகளுக்கும் நகர வாழ்க்கை சிறிது கடினமாக இருக்கிறது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. பொறுமை இழந்த நிலையில் இருவரும் உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகின்றனர். 1967ல் அந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வருகிறது. மில்ட்ரெட் மற்றும் ரிச்சர்ட் லவ்விங் அவர்களின் காதலுக்கான பல ஆண்டுகால போராட்டம் முடிந்து, கலப்பின திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதற்கான அரசாணையை அமெரிக்க அரசு வெளியிட்டது. இந்த சட்டப்போராட்டம் நடத்த லவ்விங் தம்பதியினருக்கு முக்கிய உதவி புரிந்தவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னெடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments