Tully (2018)
Director: Jason Reitman
Starring: Charlize Theron, Mackenzie Davis, Mark Duplass, Ron Livingston
Tully is a realistic depiction of parenthood. It's the emotional roller-coaster ride a woman named Marlo is going through, after her 3rd child. She is very badly in need of a break, liberation, and support. Her loving husband's focus shifts to jobs, money and video games and she feels alone and lets out. That's when a babysitter called Tully enters into her life. The babysitter is a perky young woman whose visits are at night. Thanks to the new babysitter, Marlo can now sleep well, rest well and relax. Marlo becomes very cheerful and affectionate again. She bonds with Tully quickly and they become good friends. One fine day Tully tells her that she will be quitting the job soon as she needs to move on with her life. Marlo could not take this lightly as she needs Tully in her life at least for a few more days. What happens after that is a shocking and surprising revelation. I would say, Don't miss this!
தாய்மை எந்த அளவு வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கிறதோ , அதே அளவு சில நேரங்களில் சவாலான விஷயமாக அமைகிறது என்பதை கூறுகிறது இந்தத் திரைப்படம். தனது 3ஆவது குழந்தையை ஈன்றெடுக்கிறார் மார்லா என்ற அந்தப் பெண். குறும்பு செய்வதில் வல்லவர்களாக முதல் இரண்டு குழந்தைகள் , வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் கணவர் என , இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையை பராமரிப்பதில் உதவிக்கு ஆள் இல்லாமல் மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகிறார் மார்லா. அப்போது ஒரு நாள் Tully என்ற பெண் அவருக்கு அறிமுகமாகிறார். இரவு நேரங்களில் மட்டுமே குழந்தையை பார்த்துக்கொள்வதற்காக அந்த பெண் வேலையில் சேர்கிறார். Tullyயின் வரவு மார்லாவுக்கு வரமாக அமைகிறது. அமைதியான நித்திரை மற்றும் ஓய்வு கிடைக்கிறது. தான் இழந்த மகிழ்ச்சியை திரும்ப பெறுகிறார். வாழ்க்கை அழகாகிறது.மார்லாவும் Tullyயும் நட்பு பாராட்டுகிறார்கள். ஒரு நாள் Tully சில சொந்த காரணங்களுக்காக தான் வேலைக்கு வருவதை நிறுத்திக்கொள்ள போவதாக சொல்கிறார். இது மார்லாவிற்கு பேரிடியாக அமைகிறது. அதற்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் சுவாரசியமானவை , அதிர்ச்சிகரமானவை !
Comments