Director: Cate Shortland
Starring:
Clare, a young adventurous photographer wanders the streets of Germany clicking pictures of the interesting events happening around her. She accidentally bumps into a young English teacher by the name of Andie while crossing the street. They chat casually and develop feelings for each other. Though Clare was supposed to travel to another city in Germany, she decided to spend the night with Andie. It becomes a memorable night for her too. However, the next morning, when Clare plans to leave, she discovers that Andie has locked the door and has not left the key. She spends the day in Andie's aloof apartment waiting for his return. Andie returns that evening and apologises to Clare about his forgetfulness telling her that he will be leaving the key in the dresser so that she can leave, the next day. What happens next is a shocking series of events that leads to a strange climax.
படத்தின் பெயரை பார்த்தவுடன் எனக்கு முதலில் நினைவிற்கு வந்தது "Stockholm Syndrome". ஒருவரால் கடத்தப்பட்ட நபர், சில காரணங்களுக்காக யார் கடத்தினாரோ அவரின் மேல் அன்பு அல்லது காதல் கொள்வது இந்த மனநிலை. இந்த திரைப்படம் அதுபோன்ற கதையை கொண்டிருந்தாலும், திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமாக நகர்கிறது. ஒரு இளம் பெண் ஜெர்மனியில் சுற்றுலாவிற்கு வருகிறார் . புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ள அவர் ஜெர்மனியின் அன்றாட சம்பவங்களை படம்பிடிக்கிறார். அப்போது சாலையை கடக்கும்போது ஒரு இளைஞரை தற்செயலாக சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் இடையே நெருக்கம் அதிமாக , அந்த இளைஞரின் வீட்டில் இரவை கழிக்கின்றனர் அந்த பெண். மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத, பாழடைந்த பகுதியில் உள்ள அந்த வீடு, ஒரு சிறை என்பதை அந்த பெண் அடுத்த இரண்டு நாட்களில் உணருகிறார். தான் கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்த பிறகு தன்னால் முடிந்த முயற்சிகளை எடுத்து அந்த வீட்டிலிருந்து வெளியேற துடிக்கிறார். அவரால் தப்பிக்க முடிந்ததா என்பதை கூறுகிறது ஒரு வித்தியாசமான க்ளைமாக்ஸ். இந்த திரைப்படத்தில் ரசிக்கும்படியாக உள்ள மற்றோரு விஷயம், இயக்குனர் கதையின் முக்கிய பகுதிகளை அதிக வசனங்கள் இல்லாமலே அழகாக கூறியிருப்பது . படத்திற்கு பெரிய பலம் பின்னணி இசை.
Comments