Stories by Rabindranath Tagore (2015)
Director: Anurag Basu
Where do I start? This is a brilliant creation based on some magnificent short stories written by the Nobel Laureate Rabindranath Tagore. This series is directed by Director Anurag Basu. This was first aired on EPIC channel and is also available on Netflix. Any director's nightmare is a remake of a Classic. More criticisms are expected in such cases as these are literary works that have been celebrated by the people for many years. Anurag Basu has done an impeccable job in visualizing the works of Tagore in the form of beautiful episodes. The settings, intense characters and brilliant performances have come together to create this exceptional piece and have made it an enjoyable watch for the viewers as well. Music is another great pillar that holds various elements together. The background scores and a few songs that have been remixed from famous poems and songs create magic through melody. Tagore's stories talk about Women's empowerment, Caste discrimination and many issues that are still relevant to what is happening in our society. Kudos to the creators for taking the initiative to recreate such significant content. A similar series should be created based on the revolutionary stories written by poets and authors like Puratchikavignar Bharathidasan, Arignar Anna, Kalaignar Karunanidhi and many more.
புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் கதைகளை தழுவி எடுக்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் இது. முதன்முதலில் "EPIC " என்ற தளத்தில் வெளியானது. NETFLIXலும் இந்த தொடரை காணலாம். பொதுவாக இலக்கியங்களையும் , புத்தகங்களையும் தழுவி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு விமர்சனங்கள் நிறையவே எதிர்பார்க்கலாம். அதுவும் பல வருடங்களாக மக்களால் போற்றப்படும் தாகூரின் கதைகள் இன்றளவும் நம் வாழ்வியலியலும் , சமுதாயத்திலும் ஒன்றி போகுபவை.இயக்குனர் அனுராக் பாசு ஒவ்வொரு கதையையும் எழில்மிகு இடங்களில், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை வைத்து ஒரு தொடராக இயக்கி இருக்கிறார். இதில் மற்றுமொரு அழகான விஷயம் , இசை. குறிப்பிட்ட சில பின்னணி இசை மற்றும் பாடல்கள், அந்தந்த கதைக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டாலும் , கேட்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது . பெண்கள் முன்னேற்றம் , சாதி பாகுபாடுகள் போன்ற பல புரட்சிகரமான கருத்துகளை எடுத்துரைக்கும் இப்படிப்பட்ட சிறந்த கதைகளை தொடராக உருவாக்கி இருக்கும் படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள். இதே போல தமிழில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் , அறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி போன்ற பல புரட்சி எழுத்தாளர்கள் எழுதிய புகழ்பெற்ற சிறுகதைகளும், நாவல்களும் தொலைக்காட்சி தொடர்களாக உருவாக்கப்படவேண்டும்.
Comments