ALI (2001)
Director: Michael Mann
Starring: Will Smith, Jamie Foxx, Jada Pinkett Smith, Jon Voight.

This is a biopic of the world-famous boxer Mohammad Ali which focuses mostly on the events and happenings in his life from 1964 to 1974. Ali was known to the world as a champion and a charismatic boxer. Behind his huge success were years of struggle, remorseful choices and mistakes. His enemies and challengers are constantly hatching plans to bring him down and yet, he overcomes them. He is dominatingly positive of himself, his calibre and his decisions. During these 10 years, the friendship he had with Malcolm X and the fatal ending it had is also portrayed in the movie. When asked to join the US Army to fight in the Vietnam War, Ali refuses which results in him being deprived of the World Champion Title and 5 years of imprisonment. His many failed personal relationships with the women in his life, the struggle for a comeback after a decade and many more interesting sides of this undaunting young man are shown realistically. There are many incredibly talented actors in Hollywood who weren't recognized with an Oscar yet and this is one of the movies of Will Smith that tells he is one among them.
1964ல் இருந்து 1974 வரையான காலக்கட்டத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான முகம்மது அலியின் வாழ்க்கை நிகழ்வுகளை எடுத்துச் சொல்லும் படம். அசாதாரண திறமையும், அளவில்லா தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும், நகைச்சுவை உணர்வும் கொண்ட ஒரு மனிதராய் அலி திகழ்கிறார். தன்னையும் தன் வளர்ச்சியையும் ஒடுக்க நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கு சவாலாகவும் திகழ்கிறார். கறுப்பின மக்களின் ஏற்றத்திற்காக போராடிய மால்கம் X உடன் நட்பு பாராட்டியதும் , பின்பு அந்த நட்பில் முறிவு ஏற்பட்டு இருவரும் வெவ்வேறு பாதையில் சென்ற வரலாறும் படத்தில் காட்டப்படுகிறது.இந்த பத்து வருடத்தில் அலியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தாலும் , எல்லாவற்றையும் மீறி எப்படி மீண்டு வருகிறார் இந்த மனிதர் என்பதை இந்த திரைப்படத்தில் நேர்த்தியாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். தன்னுடைய வாழ்க்கையில் தான் செய்த தவறுகள் , வருந்தத்தக்க சம்பவங்கள் என அலியின் வாழ்க்கை பயணத்தின் இந்த ஒரு பகுதி , யதார்த்தமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் விருது வழங்கப்படவேண்டிய எத்தனையோ திறமையான நடிகர்கள் இன்னும் அந்த அங்கீகாரம் இல்லாமல் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் வில் ஸ்மித்தும் ஒருவர் என்பதை இந்த படமும் உணர்த்தும் .

Comments