Leeches (2016)
Director: Payal Sethi
Starring: Sherin Bhatt, Preeti Golacha, Sayani Gupta
They call it "Bride Bazaar" in Hyderabad. This short movie is based on true stories and real events. A few years ago many arrests were made in Hyderabad on the grounds of Child trafficking and Child marriages. Wealthy and aged Sheikhs and businessmen from the Middle East get married to young girls and children from Hyderabad through a few brokers on a temporary basis. They pay a lump sum to the parents of these girls and buy them off. When the marriage happens, they ensure that these young brides sign the Divorce papers as well. After a few days or months, these girls are exploited left deserted or are disowned by their so-called "husbands". Some even turn up pregnant without any evidence to claim the father of the child. The movie highlights all these worrisome incidents in 27 minutes and leaves us with a thought of the sad reality and situation of these poor souls. All the actors in the movie have done a brilliant job. A must-watch movie.
உண்மை சம்பவங்களை மய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம் இது. சர்ச்சைக்குரிய ஒரு பிரச்னையை கையிலெடுத்து அதனை வெளி உலகத்திற்கு ஒரு 27 நிமிட கூறும்படத்தின் மூலம் காட்டியிருக்கிறார் இயக்குனர். சில வருடங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் கடத்தல் தொடர்பாக சில நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டோர் வெளிநாடுகளில் உள்ள பெரிய பணக்காரர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லீம் சிறுமிகளை கடத்துகின்றனர் . இங்குள்ள புரோக்கர்கள் சிறுமிகளின் பெற்றோரிடம் அதிக அளவு பணம் மற்றும் நகையை கொடுத்து அந்த பெண்களை விலைக்கு வாங்குகின்றனர்.அதற்கான கமிஷனையும் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் அந்த பணக்காரர்கள் சிறுமிகளை இங்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ அழைத்து சென்று திருமணம் செய்து கொள்கின்றனர்.திருமணத்துடன் விவாகரத்து பத்திரமும் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. தேவை முடிந்ததும் , அந்த சிறுமிகளை விவாகரத்து செய்து விடுகின்றனர் . இதே நிலைமையை சிறிது வித்யாசமான கதைக்களத்துடன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இந்த படத்தின் இயக்குனர். சில காட்சிகளை பார்க்கும்போது இயற்கையாகவே மனதிற்குள் சஞ்சலங்கள் ஏற்பட்டு விடுகின்றன . நடிகர்களின் இயல்பான நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். நிச்சயம் காண வேண்டிய குறும்படம்.
Comments