Mud(2012)
Director: Jeff Nichols
Starring: Matthew McConaughey, Tye Sheridan, Reese Witherspoon.
Mud is the name of the protagonist. Mud was madly in love with a girl named Juniper since his childhood. He was overprotective and possessive of her which led him to eventually murder a guy who troubled his girl. Now that he is the most-wanted man by the police and bounty hunters, Mud goes into hiding on a lone island. He lives on a broken boat. One day, 2 adventure-seeking young lads take their boat and set out to the island only to discover Mud and his boat. They make an agreement that if the boys provide supplies to Mud, he will eventually leave his boat to them. The 3 of them eventually develop a warm friendship. The movie's unpredictable end tells you whether the boys got their boat/ Mud came out of the Island /got reunited with his girlfriend or not. Mathew Matthew McConaughey received a lot of praise for this role.
மட்- இதுதான் படத்தில் கதாநாயகனின் பெயர். விவரம் தெரிந்த நாளிலிருந்தே தான் உயிருக்கு உயிராக நேசித்த ஒரு பெண்ணால், அவள் மீது தான் கொண்டுள்ள அதீத அக்கறையினாலும் பாசத்தினாலும் அவளுக்காக எதையும் செய்ய துணிகிறான் மட் . ஒரு கட்டத்தில் , அவளுக்கு தொல்லை கொடுத்த ஒரு நபரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிடுகிறான்.காவல்துறைக்கும் தன்னை பழி வாங்கத்துடிக்கும் இறந்த நபரின் தந்தைக்கு பயந்தும் யாரும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு தீவில், ஒரு படகில் தனியே வாழ்கிறான். திடீரெனெ ஒரு நாள் இரண்டு துறுதுறு சிறுவர்கள் தங்களுடைய படகில் அந்த தீவின் பக்கம் வரவே, மட் வாழுகின்ற படகை கவனித்து விடுகின்றனர். இந்த மூன்று பெரும் சந்தித்து கொள்கின்றனர், .தனக்கு தேவையான உணவு மற்றும் இதர சாதனங்களை சிறுவர்கள் அந்த தீவிற்கு கொண்டு வந்தால் , இறுதியில் அந்த படகை அவர்களுக்கே கொடுத்துவிடுவதாக ஒரு ஒப்பந்தம் போடுகிறான் மட். நாளடைவில் அவர்களுக்குள் ஒரு அழகான நட்பு உருவாகிறது.மட் தலைமறைவு வாழ்க்கையிலிருந்து வெளியே வருகிறானா , தன் காதலியுடன் ஒன்று சேர்கிறானா , சிறுவர்களுக்கு படகு கிடைத்ததா , என்பதை படம் ஒரு எதிர்பாராத முடிவுடன் கூறுகிறது.
Comments