Bird Box (2018)
Director : Susanne Bier
Starring Sandra Bullock, Sarah Paulson
This thriller would surely remind you of "A Quiet Place" but it comes with its own blend of uniqueness and elements of thrill. A dark entity that has no appearance hunts humans by messing with their brains and driving them nuts eventually making them kill themselves. This deadly phenomenon hits places like Russia and Europe first and then attacks the US as well. This force is visible to the naked eye but not when one is blindfolded or visually impaired. It also uses various other tactics to hunt down humans and make them suicidal. When everyone is running amok trying to save themselves, a very pregnant Sandra Bullock and her sister are also among the chaos in the car trying to figure out what's happening around them. Suddenly Sandra's Cousin sees the entity and loses control of the vehicle which results in an accident. Luckily Sandra is safe only to see her cousin after surviving the crash, jump in front of another truck and kill herself as she is now controlled by something that she has seen with her naked eyes. Will Sandra survive? What is this entity? How to overcome this dark force? Why is the movie called "Bird Box"? Watch it to find out.
"A Quiet Place" திரைப்படத்தை போன்ற கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. ஆனால் ஒரு தனித்தன்மை வாய்ந்த திரைக்கதையை பெற்றிருக்கின்றது. இங்கேயும் ஒரு கண்ணனுக்கு தெரியாத சக்தி மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கிறது. முதலில் ரஷ்யா , ஐரோப்பா போன்ற இடங்களில் பரவ ஆரம்பித்து பின் அமெரிக்காவை குறி வைக்கிறது. நிறை மாத கர்பிணியான சான்ட்ரா தனது வழக்கமான மருத்துவ பரிசோதனையை முடித்துக்கொண்டு தனது சகோதரியுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் அந்த கோர சம்பவம் தங்களின் கண் முன் நடந்தேறுகிறது. திடீரென சாலைகளில் மக்கள் பைத்தியம் பிடித்ததைப்போல ஓடுகிறார்கள், முக பாவனைகள் மாறுகின்றன , இறுதியில் ஏதோ ஒரு வழியில் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். இதை பார்த்த இருவருக்கும் நடுக்கம் ஏற்படுகிறது. அடுத்த கணம் வண்டி ஒட்டிக்கொண்டிருக்கும் சாண்ட்ராவின் சகோதரியும் அந்த சக்தியை பார்த்துவிடுகிறார். தன்னிலை மறந்து வண்டியை விபத்துக்குள்ளாக்குகிறார். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பிவிடுகிறார்கள். எனினும் அடுத்த கனமே சாண்ட்ராவின் சகோதரி எதிரே வந்த சரக்கு வண்டியின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இதை பார்த்து கொலைநடுங்கி போன சான்ட்ரா தன்னையும் , வயிற்றில் வளரும் தனதன குழந்தையையும் காப்பாற்றி கொள்வதற்காக அடைக்கலம் தேடி ஓடுகிறார் . இறுதியில் அவர் பிழைத்துக்கொண்டாரா ?
மக்களை தற்கொலைக்கு தூண்டி அவர்கள் உயிரைப்பறிக்கும் இந்த சக்தி என்ன ? ஏன் படத்தின் பெயர் "Bird Box" போன்ற கேள்விகளுக்கு விடைகள் படத்தின் பல்வேறு பகுதிகளில் ஒளிந்துள்ளன.
Comments